×

அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு பெற்று திமுக எம்பி கனிமொழி பயணம்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் புதிய வழித்தட பேருந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவங்கி வைத்து, அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தார். மில்லர் புரத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி,“மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுபாடு இருந்த ஒரே காரணத்தால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்
 

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் புதிய வழித்தட பேருந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவங்கி வைத்து, அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தார்.

மில்லர் புரத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி,“மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் தட்டுபாடு இருந்த ஒரே காரணத்தால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிர்ணயித்த அளவைவிட குறைவாக ஆக்சிஜன் உற்பத்தி செய்தாலும் தென்மாவட்டங்கள் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். தற்போது தொற்று குறைந்து உள்ள காரணத்தால் ஆக்சிஜன் தேவை இல்லாததால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தனது நிலையை தெரிவித்துள்ளது. அதிமுக அரசு 10 ஆண்டுகாலம் செய்யாத திட்டங்களை திமுக பொறுப்பேற்ற 90 நாட்களுக்கு முன்னதாகவே செய்ததால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுகவினர் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கொரோனாவின் மூன்றாம் அலை ஆரம்பிக்க தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டுவருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள ஆக்கிஜன் முழுமையாக வெளியே கொண்டு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம், தண்ணீர் நிறுத்தப்படும்” எனக் கூறினார்.