×

அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண ஆடையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் !

140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. அப்போதிலிருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 140 ஆண்டுகள் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. அப்போதிலிருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் குறித்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இன்று முதல் 7 நாட்களுக்கு விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்சன்-ல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
 

140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியைத் தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. அப்போதிலிருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 140 ஆண்டுகள் வரலாறு காணாத  வறட்சியைத் தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டு கண்டது. அப்போதிலிருந்தே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் குறித்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், இன்று முதல் 7 நாட்களுக்கு விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ஜங்சன்-ல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. அதன் படி, உடம்பில் நாமம் போட்டுக் கொண்டு அரை நிர்வாண ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கோரிக்கைகள்:

  • 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு இன்னும் நஷ்டஈடு வழங்காததை வழங்க வேண்டும்
  • உச்ச நீதிமன்றமே அனைத்து விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய யோசியுங்கள் என்று கூறியும்,  தள்ளுபடி செய்ய மறுக்கக் கூடாது. 
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,
  • நகை ஏலம்  ஜப்தி நடவடிக்கையை நிறுத்திட வேண்டும். வெங்காயத்தை விவசாயிகளிடம் அரசே நியாயமான விலையில் கொள்முதல் செய்து குறைவான விலையில் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
  • காவிரியில்  வரும் வெள்ளநீரை 30 ஆண்டுகளுக்கு முன்பே மேட்டூர் – அய்யாறு – உப்பாறு இணைப்பு திட்டம், காவிரி – குண்டாறு – வைகை இணைப்பு  திட்டம் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும். 
  • கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 
  • ஊட்டியில் பெய்யும் மழைநீரை மாயாறு வழியாகக் கர்நாடகத்திற்குச் செல்லாமல் பவானி அணைக்குத் திருப்பி விட வேண்டும். 
  • 10 ஆண்டுகள் முன்பு குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் செய்த அரசு தற்பொழுது லாபகரமான விலையை விவசாயிகளுக்குக் கொடுக்காமல்,  விவசாயிகளை விவசாயத்தை விரட்டிவிட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொண்டு 1 மடங்கு விளைச்சலுக்குப் பதில் 5 மடங்கு உற்பத்தியாகும் மரபணு மாற்றப்பட்ட உணவை உற்பத்தி செய்து இளைஞர்களுக்குக் கொடுத்து ஆண்மை இழக்கவும்,  பெண்கள் குழந்தை பெற முடியாமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதை உணவை இறக்குமதி செய்வதைத் தடுக்க வேண்டும்.