×

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு…15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 15 பேர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ல் சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்ற செயலில்
 

பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த  லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 15 பேர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ல் சென்னை அயனாவரம் அடுக்குமாடிக்  குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த  லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே  உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்ற செயலில் ஈடுபட்ட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.  இதில் பாபு என்பவர் இறந்துவிட்டார்.  இதை தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இருப்பினும் அது கடந்த ஆண்டு ஜனாவை மாதம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை மகளிர் நீதிமன்றத்தில்  கடந்த 11 மாதங்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில்  நீதிபதி மஞ்சுளா இன்று தீர்ப்பளித்தார். அதில் , 15 பேர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.