×

அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க அமமுக மாவட்ட செயலாளர் நிதியுதவி!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால், காய்கறி, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக் கணக்கான மக்கள் தினமும் அதில் உணவு அருந்தி வருகின்றனர். இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக இன்று முதல்
 

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால், காய்கறி, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே போல மக்களின் நலன் கருதி, அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நூற்றுக் கணக்கான மக்கள் தினமும் அதில் உணவு அருந்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக இன்று முதல் 14 ஆம் தேதி வரை இலவசமாக உணவு வழங்க முடிவெடுத்து, திருச்சி மரக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நிதியுதவி அளித்துள்ளார். அவர் மாநகராட்சி ஆணையரிடம் முதல் கட்டமாக ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார்.