×

அமைதிக்கு விரோதமாக இருப்பது “டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்” : ஹெச்.ராஜா விமர்சனம்!

அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகள் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட
 

அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

திராவிட கட்சியின் முன்னோடி, பகுத்தறிவு பகலவன்  தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகள் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  அதேபோல் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் பெரியாருக்கு அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர்  ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஈவேரா பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவு தந்தார். அதேபோல லண்டனில் இருந்து கொண்டாடுவது சென்னை ராஜதானியை ஆளவேண்டும் என்று தீர்மானம் போட்டார்.ஆகவே இந்த நாட்டில் அமைதிக்கு விரோதமாக இருப்பது”டெரரிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும்” என்று பதிவிட்டுள்ளார். 

இதைக்கண்ட நெட்டிசன்கள், பொழுது விடிஞ்சா போதும் எதையாவது உளறவேண்டியது என்று கமெண்ட் செய்து ஹெச். ராஜாவை கலாய்த்து வருகிறார்கள்.