×

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் காலமானார். தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2007 வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக இருந்த இவர் 1989, 1991, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில்
 

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் காலமானார்.

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2007 வரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக இருந்த இவர் 1989, 1991, 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் அதிமுக தொகுதியில் இருந்து மக்களவைக்கு அதிமுக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். . பிரமலை கல்லர் சமூகத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெயலலிதா மே 2016-ஆம் ஆண்டு திண்டுக்கல் சீனிவாசனை வனத்துறை அமைச்சராக நியமித்தார். இது தமிழக அரசில் அவரது முதல் அமைச்சரவை பதவி ஆகும். மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் (வயது 67) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு அதிமுகவினர் இடையே சோகத்தை எழுப்பியுள்ளது. நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் அமைச்சர் சீனிவாசனை போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து வருகின்றனர்.