×

அமமுகவை விட்டு இவர் மட்டும் போனால் மானம் கப்பலேறி விடும்… கையை பிடித்து கெஞ்சும் டி.டி.வி.தினகரன்..!

யார் வேண்டுமானாலும் போகட்டும். அதை பற்றி கவலை இல்லை. ஆனால் நீங்கள் போய்விட்டால் எனது மானமே கப்பலேறி விடும். மக்களவை – இடைத்தேர்தல் ஆபரேஷனுக்கு பிறகு குற்றுயிரும் குலையுயிருமாக நிர்வாகிகளை தக்க வைக்கமுடியாமல் தள்ளாடி வருகிறது அமமுக. போகிறவர்கள் போகலாம் நான் தடுக்க மாட்டேன் என ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டிய டி.டி.வி.தினகரன் ஒரே ஒரு நபரிடம் மட்டும் கட்சியை விட்டு நீங்கள் போய்விட்டால் எல்லாம் போய்விடும். எனது மானத்தை காப்பாற்றுங்கள் என அந்த நிர்வாகியின் கையை பிடித்துக்
 

யார் வேண்டுமானாலும் போகட்டும். அதை பற்றி கவலை இல்லை. ஆனால் நீங்கள் போய்விட்டால் எனது மானமே கப்பலேறி விடும்.

மக்களவை – இடைத்தேர்தல் ஆபரேஷனுக்கு பிறகு குற்றுயிரும் குலையுயிருமாக நிர்வாகிகளை தக்க வைக்கமுடியாமல் தள்ளாடி வருகிறது அமமுக.  போகிறவர்கள் போகலாம் நான் தடுக்க மாட்டேன் என ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டிய டி.டி.வி.தினகரன் ஒரே ஒரு நபரிடம் மட்டும் கட்சியை விட்டு நீங்கள் போய்விட்டால் எல்லாம் போய்விடும். எனது மானத்தை காப்பாற்றுங்கள் என அந்த நிர்வாகியின் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சிய தகவல் வெளியாகி இருக்கிறது. 

தேர்தலில் படு தோல்வி அடைந்த உடன் டி.டி.வி அணியில் இருந்து  முதல் ஆளாக அமமுக அமைப்பு செயலாளர் ஆதித்தன் அதிமுகவிற்கு தாவினார். அதை தொடர்ந்து அண்ணாமலை, திருநெல்வேலி அமமுக மக்களவை வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் என படைபெடுத்து அதிமுக பக்கம் தாவினர். இந்த லிஸ்டில் அடுத்து  தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் பெயர்களும் அடிபடுகிறது.

ஆனால் இவ்வளவு நடந்தும் டி.டி.வி.தினகரன் எந்தவித சலனத்தையும், கோபத்தையும், வெறுப்பையும், காட்டவில்லை. போனால் போகட்டும் போடா என்கிற விரக்தியில் இருந்தவர், இசக்கி சுப்பையா அதிமுகவுக்கு தாவுவதாக தகவல் வந்ததும் மனிதர் கலங்கி தவித்து விட்டார். இந்த இசக்கி சுப்பையா அதிமுகவின் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். குற்றாலத்தில் ரிசார்ட், நிலபுலண்கள், ஏகப்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரர். காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரின் சம்பந்தியும் கூட. 

இசக்கி சுப்பையா அதிமுகவுக்கு தாவுவதாக தகவல் கிடைத்ததும் அவரை நேரில் அழைத்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘யார் வேண்டுமானாலும் போகட்டும். அதை பற்றி கவலை இல்லை. ஆனால் நீங்கள் போய்விட்டால் எனது மானமே கப்பலேறி விடும். இந்தத் தோல்வி பாஜக ஓட்டு மிஷினில் தில்லுமுல்லு செய்ததால் ஏற்பட்டது. அதனை நீங்களுமா நம்பவில்லை. தொண்டர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். தயவு செய்து உங்கள் முடிவை பரிசீலனை செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டாராம். 

இதனால் மனம் மாறிய இசக்கி சுப்பையா அதிமுகவுக்கு தாவும் மனநிலையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. எல்லோரையும் தடுக்காத டி.டி.வி.தினகரன், இசக்கி சுப்பையாவை மட்டும் தடுத்து கெஞ்சியது ஏன்..? உணிமையில் இசக்கி சுப்பையா கட்சி தாவினால் டி.டி.வி.தினகரனின் மானம் கப்பலேறி விடும். காரணம் அமமுக தலைமை அலுவலகம் சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வருகிறதே.. அந்தக் கட்டடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. அவர் கட்சி மாறினால், அந்த அலுவலகத்தையும் காலி செய்யும் நிலைக்கு டி.டி..வி.தினகரன் தள்ளப்பட்டு விடுவார். ஏற்கெனவே கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் கட்சி ஆபீஸையும் காலி செய்தால் அது எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே..