×

அனைத்து அரசு பள்ளிகளில் இனி ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி! அசத்தும் எடப்பாடி அரசு

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலத்தில்
 

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு  முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலத்தில் சரளமாக தங்கள் திறனை வெளிப்படுத்தவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு  முதல் 5ஆம் வகுப்பு வரை 90 நிமிடத்துக்கான ஒரு பாடவேளையில் 40 நிமிடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் 6 ஆம் முதல் 9ஆம் வகுப்பு வரை 45 நிமிடத்துக்கான பாடவேளையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு நேரம் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.