×

அத்திவரதர் சன்னதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு  ‘அத்திவரதர்’ என பெயர் சூட்டல்! 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் விமலா ஆகியோர் தம்பதியினர் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக இன்று காலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர். வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் விமலா ஆகியோர் தம்பதியினர் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக இன்று காலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர். அத்தி வரதர் தரிசனம் முடிந்து கோயில் வளாகத்தை விட்டு வெளியே வரும்போது
 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் விமலா ஆகியோர் தம்பதியினர் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக இன்று காலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மற்றும் விமலா ஆகியோர் தம்பதியினர் அத்திவரதரை தரிசனம் மேற்கொள்வதற்காக இன்று காலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

அத்தி வரதர் தரிசனம் முடிந்து கோயில் வளாகத்தை விட்டு வெளியே வரும்போது திடீரென விமலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை உட்படுத்தினர். அப்போது அங்கே பணியில் இருந்த உதவி மருத்துவர் கௌதமன் மற்றும் செவிலியர் யோக வள்ளி ஆகியோர் அளித்த மருத்துவத்தால் சிறப்பு மருத்துவ முகாமிலேயே விமலாவிற்கு 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து 108 அவசர ஊர்தியில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக விமலாவை அனுப்பி வைத்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.  அத்தி வரதர் வைபவத்தில் கோவில் சன்னிதானத்தில் தன் மகன் பிறந்த காரணத்தினால் தன் மகனுக்கு அத்தி வரதர் என பெயர் சூட்டி உள்ளதாக குழந்தையின் தந்தை அசோக்குமார் தெரிவித்துள்ளார்.