×

அத்திவரதர் கோயிலில் வலிப்பு நோயால் விழுந்த நபர்: ஓடி வந்து உதவிய பெண் காவலர்!

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதரை தரிசிக்கலாம். அந்த வகையில் அத்தி வரதரை லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டு அவரது அருளைப் பெற்றுச் செல்கின்றனர். 48 நாட்கள்
 

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்தி வரதரை தரிசிக்கலாம். அந்த வகையில் அத்தி வரதரை லட்சக்கணக்கான மக்கள் வழிபட்டு அவரது அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.  48 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை இதுவரை 15 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்.  நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 

இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்கப் பக்தர் ஒருவர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு வந்துள்ளது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த தீபா என்ற பெண் காவலர், அவரது முகத்தில் தண்ணீரை தெளித்தும் விசிறி விட்டும் முதலுதவி செய்துள்ளார். மேலும் ஆம்புலன்ஸுக்கு  தகவல் கொடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நெகிழ்ச்சியடைந்ததுடன், பெண் காவலருக்குப் பாராட்டும் தெரிவித்தனர்.