×

அத்திவரதரின் பாக்ஸ் ஆபிஸ்! உண்டியல்  காணிக்கையாக ரூ. 10 கோடியே 60 லட்சம்!! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் ரூ. 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வசூலாகியுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் ரூ. 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வசூலாகியுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் உற்சவம் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது. சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நிறைவு நாள்
 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் ரூ. 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வசூலாகியுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் ரூ. 10 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வசூலாகியுள்ளது. 

காஞ்சிபுரம் அத்திவரதர் கோயில் உற்சவம் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது.  சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நிறைவு நாள் வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த் உள்ளிட்ட சில நடிகர்களும் அத்தி வரதரை தரிசித்தனர். மேலும், கோடிக்கணக்கான பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 

இந்நிலையில் அத்திவரதர் வைபவத்தையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 18 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தினர். இதில் தற்போது 13 உண்டியல்கள் எண்ணப்பட்டன. இவற்றில் 10 கோடியே 60 லட்சத்து, 3 ஆயிரத்து 129 ரூபாயும் 165 கிராம் தங்கமும் ஐயாயிரத்து 339 கிராம் வெள்ளியாகவும் கிடைக்கப்பெற்றன. மேலும் 5 உண்டியல்கள் விரைவில் எண்ணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.