×

அத்திப்பூத்தாற்போல் வருவதால்தான் அத்திவரதர் – ஜீயர் கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்!

அமைச்சரிடம் ஜீயரின் கோரிக்கை குறித்து கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஆகம் விதிகள் என்னவோ, அதில் எந்த மாற்றமும் இருக்காது எனக்கூறி ஜீயர் கோரிக்கையை நிராகரித்தார். கடந்த 23 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் அத்திவரதர் தரிசனத்தை நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ‘கடந்த காலங்களில் திருட்டு பயத்தால்தான் அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைக்கப்பட்டது, 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ள அத்திவரதரை இனி புதைக்க
 

அமைச்சரிடம் ஜீயரின் கோரிக்கை குறித்து கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஆகம் விதிகள் என்னவோ, அதில் எந்த மாற்றமும் இருக்காது எனக்கூறி ஜீயர் கோரிக்கையை நிராகரித்தார்.

கடந்த 23 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் அத்திவரதர் தரிசனத்தை நாள்தோறும் ஒரு ல‌ட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ‘கடந்த காலங்களில் திருட்டு பயத்தால்தான் அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைக்கப்பட்டது, 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ள அத்திவரதரை இனி புதைக்க தேவையில்லை, எனவே அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்கக் கூடாது’ என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக’ ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மேற்பார்வையிட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வந்திருந்தார். அத்திவரதர் தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்த அமைச்சரிடம், ஜீயரின் கோரிக்கை குறித்து கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஆகம் விதிகள் என்னவோ, அதில் எந்த மாற்றமும் இருக்காது எனக்கூறி ஜீயர் கோரிக்கையை நிராகரித்தார்.