×

அத்தி வரதர் தரிசனத்தில் உலவிய போலி விஐபி பாஸ்கள்: 11 பேர் அதிரடி கைது!

அத்தி வரதர் தரிசனத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி கடந்த 17 ஆம் தேதி முடிவுற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள்
 

அத்தி வரதர் தரிசனத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம்: அத்தி வரதர் தரிசனத்தின் போது போலி விஐபி பாஸ் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி கடந்த 17 ஆம் தேதி முடிவுற்றது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்தி வரதர் கடந்த 17ஆம் தேதி கோயில் வளாகத்திலுள்ள அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார். 

இந்த அத்தி வரதர் வைபவத்தின் போது விவிஐபி தரிசனம், விஐபி தரிசனம், பொது தரிசனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான பாஸ்களும் வழங்கப்பட்டன. இதில் சில பாஸ்களை ஸ்கேன்  செய்த போது  தான் அது போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில்  விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில், ரமேஷ், அப்துல், காதர், பாலு, நவுசத், அசோக் மற்றும் களிவரதன் உள்ளிட்ட ஏழு பேர்களையும், சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட தனசேகர், திலால்,  உள்ளிட்ட நான்கு பேர்கள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.