×

அதிமுக – பாமக கூட்டணி: பண்ணை வீட்டில் எடப்பாடிக்கு விருந்து வைக்கும் ராமதாஸ்

தைலாபுரத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் :தைலாபுரத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதிகளும் வழங்குவதாக உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இது மட்டுமல்லாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும்பொழுது, ராமதாஸை வார்த்தைக்கு வார்த்தை ’ஐயா’ என்று
 

தைலாபுரத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் :தைலாபுரத்திலுள்ள ராமதாஸ் இல்லத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளிக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாமகவுக்கு 7 தொகுதிகளும், 1 மாநிலங்களவை தொகுதிகளும் வழங்குவதாக உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது மட்டுமல்லாமல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும்பொழுது, ராமதாஸை வார்த்தைக்கு வார்த்தை ’ஐயா’ என்று எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி உறுதியான அன்றே, கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் ராமதாஸுக்குத் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து அளித்து நெருக்கத்தை அதிகரித்து கொண்டுள்ளார். 

இந்நிலையில்,  எடப்பாடி பழனிசாமியை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திலுள்ள தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார் ராமதாஸ். எடப்பாடி பழனிசாமியும் ராமதாஸின் அழைப்பை ஏற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாளை நடைபெறவிருக்கும்  இந்த விருந்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.