×

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் : கால அவகாசம் நீட்டிப்பு என தகவல்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் நாடாளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. அதன்படி மக்களவைத்
 

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் நாடாளுமன்ற தேர்தலில்  40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. அதன்படி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 

இதுவரை சுமார் ஆயிரத்து 300 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரத்து 150 மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இறுதி நாளான இன்றும் விருப்பமனுக்களைப் பூர்த்தி செய்து ஆர்வத்துடன் சமர்ப்பித்து வருகின்றனர். இதனால் விருப்ப மனு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜக்கையன் மகன் பாலமணி,அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், தென் சென்னை தொகுதி எம்.பி.யுமான ஜெயவர்தனன் ஆகியோர் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.