×

அதிக சத்தத்துடன் அரங்கேறிய குத்தாட்டம்.. அதிமுக பொதுக்கூட்டத்தால் அவதிக்குள்ளான பிளஸ்12 மாணவர்கள்!

மாலை 5 மணிக்கு ஆரம்பமான நடனம், இரவு 10 மணி வரையிலும் இடைவிடாது அதிக சத்தத்துடன் நடைபெற்றுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா இன்னும் நடந்து வருகிறது. அதே போல, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்திலும் நிகழ்ச்சிக்குக் கடந்த 1 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து,
 

மாலை 5 மணிக்கு ஆரம்பமான நடனம், இரவு 10 மணி வரையிலும் இடைவிடாது அதிக சத்தத்துடன் நடைபெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா இன்னும் நடந்து வருகிறது. அதே போல, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்திலும் நிகழ்ச்சிக்குக் கடந்த 1 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கிராமத்தில் போடப் பட்ட பொதுக் கூட்ட மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

மாலை 5 மணிக்கு ஆரம்பமான நடனம், இரவு 10 மணி வரையிலும் இடைவிடாது அதிக சத்தத்துடன் நடைபெற்றுள்ளது. இதனிடையே அமைச்சர் கருப்பணன் நிகழ்ச்சிக்குச்  சிறப்பு விருந்தினராக வந்திருந்ததால்,  தொடர்ந்து குத்தாட்டம் நடந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியிலிருந்த பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்குப் படிக்க முடியாமல், அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரின் தாயார் ஈஸ்வரி, சத்தத்தைக் குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

 இது குறித்துப் பேசிய ஈஸ்வரி, “என் மகள் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார். இந்த சத்தம் அவள் படிப்பதற்கு இடையூறாக இருப்பதால் சத்தத்தைக் குறைக்கும் படி கூறினேன். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்த வில்லை. என் கணவர் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.