×

அண்ணா நூற்றாண்டு நூலகம் வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பு: ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் இந்த நூலகம், ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாக விளங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைந்திருக்கிறது.
 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் அரங்கு வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் இந்த நூலகம், ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாக விளங்கி வருகிறது.

இந்த நூலகத்தில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு அமைந்திருக்கிறது. அந்த அரங்கு இனி வாடகைக்கு விடப்படும் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இந்த அரங்கின் ஒரு நாள் வாடகை கட்டணமாக ரூ 2.31 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு 60% தள்ளுபடி வழங்கப்படும் எனவும் பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.