×

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 25% அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ எட்டியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 25% அதிகமாக இருக்கிறது என்றும் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. அதே போல மாதத்திற்கு 40 முதல் 50 லட்சம்
 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ எட்டியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 25% அதிகமாக இருக்கிறது என்றும் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. 

அதே போல மாதத்திற்கு 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் நன்கொடைகள் கூட கொரோனாவால் குறைந்து விட்டது. அதே போல புற்றுநோயின்  முக்கிய சிகிச்சையான கீமோ தெரப்பி செய்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றனர். அதற்கான மருந்து மட்டுமே மாதம் 2 கோடி ரூபாய் ஆகும். மேலும், இந்த கொரோனா காரணமாக பணியாளர்களின் வருகையும் குறைந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.