×

அடேங்கப்பா… அத்தி வரதரை இதுவரைக்கும் இவ்ளோ பேர் தரிசனம் பண்ணிருக்காங்களா?

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. காஞ்சிபுரம்: அத்தி வரதரைக் கடந்த 28 நாட்களில் சுமார் 41 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தி வரதர் திருவிழா தொடங்கி இன்றுடன் 29 நாட்கள் ஆகிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் எழுந்தருள இருப்பதால், அன்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம்
 

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

காஞ்சிபுரம்:  அத்தி வரதரைக் கடந்த 28 நாட்களில் சுமார் 41 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தி வரதர் திருவிழா தொடங்கி இன்றுடன்  29 நாட்கள் ஆகிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் எழுந்தருள இருப்பதால், அன்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

இந்நிலையில்  கடந்த 28 நாட்களில் அத்தி வரதரை இதுவரை சுமார் 41 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுமார் 3 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். மேலும்  கூட்ட நெரிசலினால் 30 பேர் மயக்கமடைந்து பின்னர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.