×

அடுக்கடுக்காக அம்பலமாகும் முறைகேடுகள்… டிஎன்பிஎஸ்சி இளநிலை பொறியாளர் தேர்விலுமா!

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது இது தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த முறைகேட்டிற்கு
 

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதிய 40 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது  இது தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த முறைகேட்டிற்கு மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், அவரே வந்து நேற்று சரண் அடைந்தார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த இளநிலை பொறியாளர் (ஆர்க்கிடெக்) தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த தேர்வில் தேர்வான  33 பேரில் 28 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியதைக் கண்டு பிடித்தனர். மொத்தமாக 32 இடங்களில் நடந்த இந்த தேர்வில் சென்னையில் மட்டுமே 77% பேர் பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதனால் இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.