“ஆணுறையை என் பையில் வைத்து கொலை மிரட்டல்” - சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் விஷ்ணு பேட்டி
சர்ச்சையில் சிக்கிய தவெக ஆதரவாளர் விஷ்ணு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணு, “என்னை பார்ட்டிக்கு அழைத்த ஒரு கும்பல், அங்கே ஒருவரின் தங்கையிடம் நான் தவறாக நடந்து கொண்டதாக நாடகமாடி, என்னை தாக்கி வலுக்கட்டாயமாக அப்படி பேசவைத்து வீடியோ எடுத்துவிட்டனர். ஆணுறையை என் பையில் வைத்து, நான்தான் கொண்டு சென்றேன் என சித்தரித்துவிட்டனர். கொலை மிரட்டல் விடுத்து ரூ.1 கோடி கொடுத்தால் விட்டுவிடுகிறேன் என்றனர். பணமில்லாததால், உயிர் பிழைத்தால் போதுமென அப்படி சொல்லி அங்கிருந்து தப்பித்தேன். என் மொபைலே அவர்களிடம்தான் இருந்தது என்பதால், எடிட் செய்யப்பட்ட வீடியோவை அதிலிருந்து பதிவிட்டுவிட்டனர். நான் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசவில்லை. நண்பராக சாதாரண குறுஞ்செய்திகளே அனுப்பினேன்.
எனது சமூக வலைதள கணக்கை ஹேக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். நான் செய்யாததை செய்ததாக கூறி, பிரண்ட்லியாக பேசியதை தவறாக சித்தரித்துள்ளனர். என்னை கடலில் இறக்கி 2 நாட்கள் சித்திரவதை செய்வோம் என மிரட்டினார்கள். என்னை உயிரோடு விட மாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர்” என்றார்.