பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி பரபரப்பு புகார்..!
மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை பற்றி வீடியோவாக வெளியிட்டு வருபவர் சுதர்சன்,
இவர் யூடியூப்பில் பதிவு செய்யும் வீடியோக்கள் சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து செல்லும். அப்படி யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் போலிசில் வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்ய போலீசார் களம் இறங்கியுள்ளனர்.
சுதர்சன் மீது அவர் மனைவி கொடுத்துள்ள புகாரில், பாதிக்கப்பட்ட விமலாதேவி என்பவர் MBBS படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் என்பவர் அறிமுகமாகி இருவரும் காதலித்து பெரியோர்கள் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைப்பெற்றதாகவும்
திருமணத்தின் போது விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்கநகையும், ரூ. 5,00,000/-ம் ரொக்கம் மற்றும் ரூ. 2,00,000/-ம் மதிப்பான சீர்வரிசை பொருட்களும் கொடுத்து நடத்தியுள்ளனர். திருமணத்தின் போது சுதர்சன் you tube Channel-ல் Technical Boss ஆக வேலை பார்த்ததாகவும் அதன் பின் Tech Super star Channel' நடத்தியும் வந்துள்ளார்.
அப்போது வீடு சொந்தமாக வீடு கட்டும் போது விமலா தேவியிடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டதாகவும் வீடுகட்டி புது வீட்டிற்கு குடிபோனதாகவும் அதன் பின் வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் எனவே சீர்வரிசை பொருட்கள் போதாது என்றும் டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு என்கொடுக்கிறாய், ஒன்னுக்கும் பத்தல, என்றும் மேலும் 20 பவுன் நகைகொண்டுவந்தால் தான் பெண்ணை வீட்டில் வைத்து கொள்வம் என்று கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர்கள் அசிங்கமாக பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 30.04.2025-ம் தேதி வீரபாண்டி கோவில் அருகில் வைத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையின் போது விமலா தேவி மற்றும் குழந்தையையும் அழைத்துச்செல்வது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடந்த போது சுதர்சன் மற்றும் அனைவரும் ஒன்று சேர்ந்து 10,00,000/-ம் பணத்தையும் பெற்றுக்கொண்டு வாதியின் 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் வாழமுடியும் என்று அசிங்கமாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் தெரிவித்துளார். இதனையடுத்து சுதர்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.