கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல்
கோவை வழுக்கம்பாறையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வழுக்கம்பாறையில் கல்லூரியில் படித்துவரும் சிவக்குமார் என்பவரின் மகளின் அடையாள அட்டையை பறித்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தனது மகள் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்ட தந்தை சிவக்குமாரின் வீடு புகுந்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். விசாரணையில் சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவியின் வீடு புகுந்து சூறையாடியதாக தெரிகிறது. சிவக்குமார் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர்கள், ரூ.1.5 லட்சம் பணம், நகைகளை திருடிச் சென்றதாகவும், இதுவரை போலீஸ் வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளிக்க போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, நீண்ட நேர காத்திருக்க வைத்துவிட்டு, மதுரைக்கரை காவல்நிலையம் செல்ல போலீசார் கூறியதாகவும் மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளனர்.