புதிய மாவட்ட செயலாளர் நியமனத்தில் இளைஞர் அணி படை- உதயநிதியின் மாஸ்டர் பிளான்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-08-2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திமுக கட்டமைப்பு ரீதியாக வலுவான மாற்றத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி மறுசீரமைப்பு குழு அளித்த அறிக்கையின்படி மாற்றத்திற்கு திமுக தலைமை தயாராகி வருகிறது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக புதிய மாவட்ட செயலாளர் நியமனத்தில் இளைஞர் அணி சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் உதயநிதிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். வரும் தலைமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பெஞ்சமின் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.