முதலமைச்சர் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞரால் பரபரப்பு..!
Sep 1, 2026, 11:17 IST
சேலம் மேட்டூர் செல்லும் முதலமைச்சர் விஜய்யின் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் கீழே விழுந்தார். தொப்பூர் அருகே வாகனத்தை பின்தொடர்ந்து ஓடிச் சென்று ஏற முயன்ற இளைஞரை பாதுகாவலர் தடுத்துள்ளார். அப்போது இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். முதலமைச்சருக்கு தவெகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வழிநெடுகிலும் திரண்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முதலமைச்சரின் வாகனம் கடந்து செல்லும் போதும் சிலர் குறுக்கே ஓடி வருவதால் போலீசார் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
முதல்வரை பார்க்கத் திடீரென ஓடிவந்த நபர்... நிலைதடுமாறிக் கீழே விழுந்த காட்சி#Selam | #CMVijay | #TVK | #Metturdam | #PuthiyathalaaimuraiTV pic.twitter.com/00iLRxkxfx
— PttvOnlinenews (@PttvNewsX) September 1, 2026