×

“அரசு வேலை தராவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெ. சமாதி மீது பெட்ரோல் வீசப்படும்”

அரசு வேலை தராவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவதற்கு அனுமதி கேட்ட மாற்றுத்திறனாளியால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் பிரசாத். மாற்றுத் திறனாளியான இவர், டிஜிபி அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளிக்க வந்தார். அப்போது அவரை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். அவர் கையில் இருந்த மனுவில், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி
 

அரசு வேலை தராவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவதற்கு அனுமதி கேட்ட மாற்றுத்திறனாளியால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் பிரசாத். மாற்றுத் திறனாளியான இவர், டிஜிபி அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளிக்க வந்தார். அப்போது அவரை போலீசார் அனுமதிக்க மறுத்தனர். அவர் கையில் இருந்த மனுவில், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று திருவல்லிக்கேணி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலையில்லாத விரக்தியில் அவர் இதுபோல் செய்தது உறுதியானது. இதையடுத்து அவரிடம் இன்று காலை மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

அண்மையில் மெரினாவில் திறக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. ஆனால் அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா உள்ளிட்ட கட்டுமான பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் பராமரிப்புப் பணிக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.