திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை - நாளை ஆலோசனைக் கூட்டம்
அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுதல், இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுப் பணிகள், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை உள்பட, திமுக இளைஞர் அணி -ன் பல்வேறு ஆக்கப்பணிகள் குறித்து மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நாளை (13-08-2023) மாலை 6.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட – மாநில மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில், காணொலிக் காட்சி வாயிலாக, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கழக இளைஞர் அணியின் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொருள் : முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை இளைஞர் அணி சார்பில் கொண்டாடுதல், இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுப் பணிகள் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணி. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.