மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
Nov 3, 2026, 18:47 IST
சென்னை மாதவரத்தில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து சக்திவேல் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரத்தில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல் என்பவர் சாலை பள்ளத்தால் பைக் நிலைதடுமாறி, மழைநீரில் தவறி விழுந்ததில் சாலையோர மின்மாற்றி கம்பி வழியாக மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தரை வழியாக செல்லும் மின்சார கம்பியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. அரசின் அலட்சியத்தால் இளைஞரின் உயிர் பறிபோனதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.