#BREAKING திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டின் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலைக்கோவிலில் எழுந்தருளி உள்ள அர்த்தநாரீஸ்வரர் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் வைகாசி விசாகத்தேர் திருவிழா 14 நாட்கள் விமர்சையாக நடைபெறும். 9ம் நாள் நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் மற்றும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்தார். ஹர்ஷ்வர்தன் என்பவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.