×

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி

 

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். இந்த அரங்கில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை மேலூர் தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குப் பின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1000 ஜல்லிக்கட்டு காளைகள், 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 

இந்நிலையில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த மகேஸ் பாண்டியன் (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாடு முட்டியதில் உயிரிழந்த மகேஸ் பாண்டியன், எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலையில் உள்ளார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடுமுட்டி உயிரிழந்துள்ளார்