×

அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் பலி

 

சென்னை காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் உயிரிழந்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு காரில் வந்த நிலையில், அவருக்கு சொந்தமான மற்றொரு காரில் அவரது குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். அப்பொழுதுதான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. குடும்பத்தினர் வந்த கார் மோதியதில் இறையன்பு என்ற இளைஞர் உயிரிழந்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்துக்குள்ளான  காரை ஆயுதப்படை காவலர் சின்ன அக்னி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அமைச்சரின் வீட்டு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்ட ஆயுதப் படை காவலரை, தனது காரை ஓட்ட அமைச்சர் பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு