×

விபத்துக்கான இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை 

 

உசிலம்பட்டி அருகே விபத்துக்கான இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்பட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கராமன், தனியார் நிறுவனத்தில் தனது காருக்கு 28ஆயிரம் ரூபாய்க்கு பம்பர் டூ பம்பர் ஆபரில் இன்சூரன்ஸ் செய்திருந்ததாக கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் செய்த இரு மாதத்திலேயே கார் விபத்துக்குள்ளாகி, கார் மற்றும் சம்மந்தப்பட்ட தங்கராமன் அவரது உறவினர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மற்றும் காருக்கான இன்சூரன்ஸ் தொகையை கேட்ட போது இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த ஐந்து மாதத்திற்கும் மேலாக காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த தங்கராமன், இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மரண வாக்குமூலம் என கடிதம் மற்றும் வீடியோ பதிவு செய்துவிட்டு இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையின் முன்பு உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற உசிலம்பட்டி போலீசார், ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாகவும், விரைவில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறிதியளித்தையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர் சாலை மறியலை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர்.