வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி இளைஞர் தற்கொலை
ஆரணி அருகே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்க வழங்க கோரிம் வேலை கிடைக்காத பட்டதாரி தனது கைப்பட கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தன் பூங்கொடி தம்பதியினருக்கு சதிஷ்குமார், விஜயகுமார் ஆகிய 2மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சதீஷ் பட்ட படிப்பு படித்து முடித்துவிட்டு மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இளைய மகன் விஜயகுமார் வேலூர் அரசு கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படிப்பை கடந்த 2018ம் ஆண்டு படிப்பை முடித்து விட்டு அரசு பணிக்கு தேர்வுகளை எழுதி படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என விரக்தியில் விஜயகுமார் தனது கைப்பட டைரியில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி எழுதி வைத்து விட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுச் தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறந்த விஜயகுமாரின் சடலம் தூக்கில் தொங்கியபோது கையில் கடிதம் வைத்து கொண்டே இறந்துள்ளார். மேலும் விஜயகுமாரின் உடலை கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் கைப்பற்றி இறந்தபோது கைப்பட எழுதிய லெட்டர் மட்டும் டைரிகளை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் கைப்பற்றுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தனது கைப்பட டைரியில் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் செயலால் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.