×

பள்ளி மாணவனை அரிவாளுடன் துரத்திய இளைஞர்- திருச்சியில் பட்டப்பகலில் அதிர்ச்சி

 

திருச்சியில் பள்ளி மாணவரை கத்தியை காட்டிய மிரட்டிய நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

திருச்சி மாநகரம் கரூர் பைபாஸ் சாலையில் பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவரை அவர் வயதொத்த மற்றொருவர் கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இரண்டு பேரும் நண்பர்கள் எனவும் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சீறுடை அணிந்த மாணவரை 17 வயதுடைய மற்றொரு நபர் முன்விரோதம் காரணமாக கரூர் பைபாஸ் சாலை அருகே சண்டையிட்டுள்ளார். அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அவரை மிரட்டி உள்ளார். இதை சாலையில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

null

null

null

null


இது குறித்து விசாரித்த கோட்டை போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய 17 வயதுடைய நபர் மீது பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.