×

மலேசியாவில் இருந்து வேலூருக்கு வந்து வாக்களித்த சாப்ட்வேர் இளம்பெண்!

 

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மலேசியாவில் இருந்து வேலூருக்கு வந்து வாக்களித்தார் சாப்ட்வேர் இளம்பெண்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. நேற்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு அளித்தனர். வேலூர் சார்பனாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் மலேசியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நேற்று முன்தினம் வேலூருக்கு வந்தார். தொடர்ந்து, இன்று வேலூர் ராமலிங்கம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வாக்களித்தார்.

பின்னர், விஜயலட்சுமி கூறுகையில்,  “நான் மலேசியால சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் தான் மலேசியாவில் இருந்து வேலூருக்கு வந்தேன். வாக்களிப்பது ஒவ்வொரு ஒருத்தரோட கடமை என நினைக்கிறேன். என்னோட கடமையை வாக்களித்து விட்டேன். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில், யார் வந்தால் நன்றாக இருக்கும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்..” என்றார்.