காதலியிடம் தற்கொலை செய்வதாக நடித்து தூக்கு போட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே, காதலியிடம் தற்கொலை செய்வதாக நடித்து தூக்கு போட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். முத்துகிருஷ்ணன் தனது சகோதரி வீட்டில் தாய் லதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லதா தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் முத் துகிருஷ்ணன் வீட்டு படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழி பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் பிணமாக தூங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தந்தை அருணாச்சலத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அருணாச்சலம், மகன் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு லதாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் லதா வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், போலீசார் விசாரணையில் முத்துகிருஷ்ணன் தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, தான் தற்கொலை செய்து கொள்வதாக விளையாட்டாக நடித்தபோது, தவறுதலாக கழுத்து இறுகி பலியாகி இருக்கலாம் என தெரியவந்தது. மேலும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.