நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை
Updated: Dec 20, 2024, 11:48 IST
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இளைஞர் ஒருவர் வந்திருந்தார். இந்த நிலையில், அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல்
அந்த இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததையும் மீறி கொலை நடந்துள்ளது.
இளைஞர் நீதிமன்ற வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.