×

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை: தொடரும் மரணங்கள்!

கோவை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுள் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 28 வயதான மதன்குமார், சென்னை பெரம்பூர் அருகில் செப்பியத்தை சேர்ந்த இளைஞர் குமரேசன், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 35 வயதான விஜயகுமார் உள்ளிட்ட
 

கோவை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுள் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 28 வயதான மதன்குமார், சென்னை பெரம்பூர் அருகில் செப்பியத்தை சேர்ந்த இளைஞர் குமரேசன், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 35 வயதான விஜயகுமார் உள்ளிட்ட பலர் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த இளைஞர் ஜீவானந்தம், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.