அவசியம் தெரிஞ்சுக்கோங்க..! 2 ஆண்டுகள் பயன்படுத்தாத வங்கி கணக்கு என்ன ஆகும் தெரியுமா..?
இந்தியாவில் உள்ள வங்கிகளை பொறுத்தவரை, எந்த ஒரு டிரான்ஸாக்ஷன் செய்யப்படாமல் இருக்கும் அக்கவுண்டுகளுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்யலாம்.
2 வருடங்களுக்கு மேல் உங்களுடைய அக்கவுண்டில் நீங்கள் எந்த ஒரு பண பரிமாற்றமும் செய்யாமல் இருந்தால், உங்களது சேமிப்பு கணக்கு 'செயலற்றது' என்று கருதப்படும். அதாவது நீங்கள் எந்த விதமான டெபாசிட், வித்டிராயல், டிரான்ஸ்ஃபர் அல்லது செக் டிரான்ஸாக்ஷன் செய்யாமல் இருந்தால் உங்கள் அக்கவுண்ட் இன்ஆக்டிவ் செய்யப்படும்.
வங்கிகள் கிரெடிட் செய்யும் வட்டி பணம் இதில் கருத்தில் கொள்ளப்படாது. உங்கள் அக்கவுண்டிற்கான நிலை மாறியவுடன் அக்கவுண்ட் மூடப்படாது. மாறாக அதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். உங்களால் டெபிட் கார்ட், இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்த முடியாது.
செயலற்ற கணக்குகள் கணக்கியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் மோசடி நடைபெறலாம். செயலற்ற கணக்குகளை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் செயலற்ற கணக்குகளுக்கு வங்கிகள் எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், உங்களுடைய பணத்தை இழக்க மாட்டீர்கள். ஏனென்றால் அந்த பணம் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். அதற்கான வட்டி என்பது தொடர்ந்து சேகரிக்கப்படும். மறுபுறம் உங்களுடைய ஸ்டேட்மெண்டுகள் அல்லது நோட்டிஃபிகேஷன் போன்ற எதையும் உங்களால் பெற முடியாது. அதேபோல வங்கி வழங்கும் மதிப்பு கூட்டு சேவைகளை உங்களால் பயன்படுத்த முடியாது. அதே சமயத்தில் உங்களுடைய அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லாத பட்சத்தில் அதற்கான அபராதங்கள் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வரலாம்.
பெரும்பாலான வங்கிகள் அக்கவுண்டை ரீஆக்டிவேட் செய்வதற்கு நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டும் என்று கருதுகின்றன. அதன்பிறகு KYC செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். சில வங்கிகள் முதலில் நெட் பேங்கிங் மூலமாக பார்ஷியல் ஆக்டிவேஷன் செயல்முறையை தூண்டி, பிறகு நேரடி சரிபார்ப்பு செயல்முறையை அமல்படுத்துகின்றன.
உங்களுடைய அக்கவுண்டை 10 வருடங்களுக்கு மேலாக நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் அந்த அக்கவுண்டில் உள்ள தொகை டெபாசிட்டர் எஜுகேஷன் அண்ட் அவேர்னஸ் ஃபண்டு (Depositor Education and Awareness Fund) அக்கவுண்டிற்கு மாற்றப்படும். ஆனாலும் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அக்கவுண்ட்டை மீண்டும் ஆக்டிவேட் செய்த பிறகு உங்களால் அந்த பணத்தை வித்டிரா செய்ய முடியும். ஆனால் இதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் தேவைப்படலாம்.