உச்சத்துக்கு போகனும்.. அப்பதான் நாமலாம் இங்க ஒரு ஆளாவே தெரிவோம்”...BISON படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!
Oct 13, 2025, 20:35 IST
துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/GPwRRVdzkdc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/GPwRRVdzkdc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
ஏற்கனவே பாடல்களில் இடம் பெற்றிருந்த மாண்டேஜ் காட்சிகளுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், தரமானதாக அமைந்துள்ளது. மொத்தம் 3 நிமிடங்கள் 25 நொடிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரை மிகவும் நேர்த்தியாக படக்குழு தயார் செய்துள்ளது. மாட்டின் மண்டை ஓட்டில் தொடங்கும் டிரைலர் அதே மாட்டின் மண்டை ஓட்டை தண்ணீருக்குள் வீசுவதில் முடிகிறது. படத்தில் கபடி மிகவும் முக்கியமான அங்கம் வகுக்கிறது என்பது மட்டும் புரிகிறது.