பெரியார் பெயரிலேயே ஊழல் செய்திருக்கிறீர்களே.. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?- அமைச்சர் ராஜ்மோகன்..!
பெரியாரின் பெயர் வைத்த நூலகத்தில் ஊழல் நடைப்பெற்று உள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் செய்துள்ளார். "கடந்த ஆட்சியில் ஊழல்... ஊழல்.. திரும்பிய திசை எல்லாம் ஊழல் என பேசினார்.
பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த குற்றச்சாட்டை அடுத்து பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கூறியதாவது, “பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. அகல்விளக்கு என்ற பதிப்பகத்தில் கிட்டத்தட்ட 1,500 நூல்கள் வாங்கியிருக்கிறார்கள். அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. அந்த நூல்களை கடந்த பிப்ரவரி மாதம் வாங்கிருக்கிறார்கள். பெரியார் அறிவுலகத்தில் நடந்திருக்கிற ஊழல், கடந்த திமுக ஆட்சியில் நடந்திருக்கும் மெகா ஊழல். பெரியார் பெயரிலேயே ஊழல் செய்திருக்கிறீர்களே.. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா? பெரியார் பெயர் வைத்த ஒரு நூலகத்தில் ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து விசாரணை தொடங்குகிறது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும்” என்று கூறினார்.
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். என்பது குறிப்பிடத்தக்கது