இனி நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை..! முதல்வன் பட ஸ்டைலில் புதிய புகார் பெட்டி!
சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் சிறப்பு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குத் தினந்தோறும் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பிக்கவும் ஏதுவாக தலைமைச் செயலக வெளி வளாக நுழைவாயில் பகுதியிலேயே ஒரு பிரத்யேக புகார் மனுப் பெட்டி புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வரும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும், விரைவாக மனுக்களைப் பெற்று உரியத் துறைகளுக்கு அனுப்பி வைக்கவும் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு பெறுவதில் உள்ள காலதாமதத்தை குறைக்கும் நோக்கில் இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாம்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், நெரிசலைத் தவிர்க்க தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி..!!#Chennai | #Secretariat | #ComplaintPetition | #PolimerNews pic.twitter.com/gJ9dGrFPyg
— Polimer News (@polimernews) June 2, 2026