இனி கனவில் கூட நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது - சட்டப்பேரவையில் அமைச்சர் என்.ஆனந்த் செம மாஸ் பதிலடி.!!
சட்டசபையில் பேசிய அமைச்சர் வினோத், "திமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஒவ்வொரு வீடும் உடைந்து தொங்குகிறது. கம்பி தெரிகிறது மறுசீரமைப்பு பணிக்காகவே 50 முதல் 55 ஆயிரம் தேவைப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் நேரு, "கடந்த காலங்களில் கட்டபட்ட வீடுகள் எல்லாம் பழுதுபட்டுள்ளது. சரியாக பழுது பார்க்கவில்லை என்று சொன்னார்கள். இந்திரா காந்தி காலத்தில் இருந்து வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. 13 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரையில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.
இந்த வீடுகளில் பயனாளிகள் கூடுதலாக காசை போட்டு கட்டுகிறார்கள். இருப்பவர்கள் அதிகமாக காசை போட்டு கட்டுகிறார்கள். இல்லாதவர்கள் இருக்கும் காசை வைத்து கட்டுகிறார்கள். ஆனால் வீடுகளை பழுது பார்ப்பதற்காக திமுக ஆட்சியில் தான் நிதி ரூ. 50,000 மேல் ஒதுக்கப்பட்டது.
பயனாளிகளின் சௌகரியத்திற்கு தான் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. நீங்களாவது ஐந்து லட்சத்தில் நல்ல முறையில் வீடுகளை கட்டுங்கள். நீங்கள் கட்டிய வீடுகளை நாங்கள் சரியில்லை என்று சொல்லாத அளவிற்கு கட்டுங்கள்" என்றார்.
அதற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், "கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டி கொடுத்த வீடுகள் இடிந்து தொங்குகிறது. அதை மக்களிடம் கேட்டால் தெரியும் . ஆனால் நமது முதலமைச்சர் ஆட்சியில் கட்டி கொடுக்கும் வீடுகள் இன்னொரு 50 ஆண்டுகளுக்கு தரமாக இருக்கும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் என் ஆனந்த், "நீங்களாவது ஒழுங்கா கட்டுங்கள் என்று மூத்த உறுப்பினர் சொன்னார். நாங்கள் எது செய்தாலும் சரியாக தான் செய்வோம். ஐயோ கிய்யோ என்று பேசாதீர்கள். நீங்கள் ஒன்று நல்லா தெரிந்து கொள்ளுங்கள், இனி நீங்கள் கனவு கண்டாலும் ஆட்சிக்கு வர முடியாது.
நாங்கள் அரசியல்வாதி அல்ல. மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்துள்ளோம். நீங்கள் அதை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் வந்து 3 மாசம் தான் ஆச்சு. என் அன்னையை பார்த்துக் கொள், என் பிள்ளையை என் தம்பியை பார்த்துக் கொள் என்று மக்கள் சொல்கிறார்கள். நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம். இதை திரும்பத் திரும்ப சொல்கிறோம். புரிகிறதா? உங்க இஷ்டத்துக்கு எதுவும் பேச வேண்டாம்" என்றார்.
அப்போது கே.என் நேரு, "அரசு அதிகாரிகள் மேற்பார்வையிடுவது மட்டும் தான் அவர்களது வேலை. அதே போன்று தான் அமைச்சர்களும் மேற்பார்வையிடுகிறார்கள். வீட்டை பயனாளிகள் தான் கட்டுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளில் இன்னும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது.
அதே போன்று திமுக ஆட்சியிலும் கலைஞரின் பெயர் அந்த இல்லத்தில் உள்ளது. எங்கள் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் தரமாகத்தான் உள்ளன. சொந்த வீடு கட்டும்போதே சில சங்கடங்கள் வருகிறது" என்றார்.
மேலும், திமுக உறுப்பினர் கோ.வி செழியன், "நாங்கள் அரசியல்வாதி அல்ல என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்து வருகிறார் அமைச்சர் ஆனந்த். ஆனால் தவெக அரசியல் இயக்கமாக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து தான் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதை மறந்துவிட கூடாது.
வேளாண்துறை ஓராண்டுக்குள் கட்டப்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது என்று சொன்னது தவறு. 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளுக்கு பழுது பார்ப்பதற்கான நிதியை தந்ததுதான் திமுக" என்றார்.
மேலும், நிதி அமைச்சர் மரியவில்சன், "திமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 14 கோடி ரூபாய் கட்டப்பட்ட மேம்பாலம் மூன்றே மாதத்தில் காலியான செய்தியை ஊரே பேசியது. இதன் மூலம் திமுக ஆட்சியில் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சராக எ.வ வேலு சாதனை படைத்துள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, "இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி அப்போதே கேள்வி கேட்டு அதற்கான பதிலையும் நான் தெரிவித்து விட்டேன். கிராம சாலை திட்டத்தின் மூலம் கிராமப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெய்யாத ஒரு மழை பெய்ததன் காரணமாக அந்த மேம்பாலம் சேதம் அடைந்தது. இது இயற்கையின் சீற்றம். 54,600 கன அடி நீரை மட்டுமே தாங்கும் அளவில் தான் அந்த மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் மூன்று லட்சம் கன அடி நீர் வந்ததால் அந்த மேம்பாலம் சேதமடைந்தது" என்றார்.
பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்ட நிதி குறித்து ஒவ்வொரு ரூபாய்க்கும் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது பாலத்தின் நிலவரம் குறித்து தெளிவாக பதில் அளிக்கப்படும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை அணை இன்னமும் கம்பீரமாக இருக்கிறது" என்றார்.
. @BussyAnand On Fire 🔥
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 19, 2026
இனி.. கனவில் கூட நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது ! 😂 pic.twitter.com/QrWB68ewax
null