×

டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், யூபிஐ மூலம் திருப்பதியில் காணிக்கை செலுத்தலாம்!

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பணம் தேவையில்லை. யூ.பி.ஐ, டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தும் வசதியை பரிசீலனை செய்துவருவதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்குச் சென்ற பிறகு உண்டியில் காணிக்கை செலுத்த  போதுமான பணம் இல்லை என்று இனி கவலைப்படத் தேவையில்லை. கையில் பணம் இல்லாவிட்டாலும் பக்தர்கள் உண்டியில் காணிக்கைகளை செலுத்தும் வகையில் ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம்' முறையை செயல்படுத்த தேவஸ்தான  தயாராகி வருகிறது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் காணிக்கைகளை செலுத்தும் வகையில் புதிய முறையை  கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி தரிசனம் செய்த பிறகு உண்டியில் காணிக்கைகளை செலுத்துவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. தேவஸ்தானத்தின் பட்ஜெட்டில் உண்டியல்  வருவாய் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ. 1,383 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். சமீப காலமாக பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட அனைவரும் கையில் பணம் வைத்திருப்பதற்கு பதிலாக யூ.பி.ஐ., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அதே மார்கத்தில் 'ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம்' முறையை அறிமுகப்படுத்த தேவஸ்தானம் செயல்பட திட்டமிட்டு வருகிறது. திருப்பதியுடன் திருமலையின் முக்கிய இடங்களில் இந்த காணிக்கை பத்திரம் கவுண்டர்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம், பக்தர்கள் யூ.பி.ஐ., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் செலுத்தி ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம் வாங்கலாம். இந்த ஆவணங்களை கோவில் உள்ள உண்டியலில் சமர்ப்பிக்கலாம். இந்த காணிக்கை பத்திரம் வாங்கும் போது பணம் நேரடியாக தேவஸ்தானத்தின் உண்டியல் காணிக்கைக்கான வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.  உண்டியலில் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதை பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இந்த ஆவணத்தை உண்டியலில் சமர்ப்பிக்கும் முறையை செயல்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இந்த மாதம் 28 ஆம் தேதி திருமலையில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இது  குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்த பணம் தேவையில் யூ.பி.ஐ, டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தும் வசதி தேவஸ்தானம் பரிசீலனை


திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்குச் சென்ற பிறகு உண்டியில் காணிக்கை செலுத்த  போதுமான பணம் இல்லை என்று இனி கவலைப்படத் தேவையில்லை. கையில் பணம் இல்லாவிட்டாலும் பக்தர்கள் உண்டியில் காணிக்கைகளை செலுத்தும் வகையில் ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம்' முறையை செயல்படுத்த தேவஸ்தான  தயாராகி வருகிறது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் காணிக்கைகளை செலுத்தும் வகையில் புதிய முறையை  கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சாமி தரிசனம் செய்த பிறகு உண்டியில் காணிக்கைகளை செலுத்துவது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. தேவஸ்தானத்தின் பட்ஜெட்டில் உண்டியல்  வருவாய் முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ. 1,383 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். சமீப காலமாக பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட அனைவரும் கையில் பணம் வைத்திருப்பதற்கு பதிலாக யூ.பி.ஐ., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அதே மார்கத்தில் 'ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம்' முறையை அறிமுகப்படுத்த தேவஸ்தானம் செயல்பட திட்டமிட்டு வருகிறது. திருப்பதியுடன் திருமலையின் முக்கிய இடங்களில் இந்த காணிக்கை பத்திரம் கவுண்டர்கள் அமைக்கப்படும். இவற்றின் மூலம், பக்தர்கள் யூ.பி.ஐ., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் செலுத்தி ஸ்ரீவாரி காணிக்கை பத்திரம் வாங்கலாம். இந்த ஆவணங்களை கோவில் உள்ள உண்டியலில் சமர்ப்பிக்கலாம். இந்த காணிக்கை பத்திரம் வாங்கும் போது பணம் நேரடியாக தேவஸ்தானத்தின் உண்டியல் காணிக்கைக்கான வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.  உண்டியலில் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதை பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இந்த ஆவணத்தை உண்டியலில் சமர்ப்பிக்கும் முறையை செயல்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  இந்த மாதம் 28 ஆம் தேதி திருமலையில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இது  குறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.