☰
×

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலா? உடனே போன் பண்ணுங்க

 

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து ஆணையர் கூறியுள்ளார்.


காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு ஊர் திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததாக புகார்கள் எழுந்தன. மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவில் -சென்னைக்கு ரூ.6,500, நெல்லை - சென்னைக்கு ரூ.6,500, கோவை - சென்னைக்கு ரூ.6,000 வரை ஆம்னி பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். 93848 08333 / 1800 425 6151 என்ற எண்ணில் தொலைபேசி, குறுஞ்செய்தி மூலம் அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து ஆணையர் கூறியுள்ளார்.