×

ஈரோட்டில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

ஈரோடு: ஈரோட்டில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி ஈரோடு: உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஈரோட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் மக்கள் ஜி ராஜன் ஏற்பாட்டில் ஈரோட்டில் முதன்முறையாக சுமார் 1,500 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யோகா மூச்சுப்பயிற்சி வழங்கும் முகாமை மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் தலைமை வகுத்து
 

ஈரோடு:

ஈரோட்டில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி ஈரோடு: உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஈரோட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் மக்கள் ஜி ராஜன் ஏற்பாட்டில் ஈரோட்டில் முதன்முறையாக சுமார் 1,500 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் ஈரோடு

மாநகராட்சி வளாகத்தில் யோகா மூச்சுப்பயிற்சி வழங்கும் முகாமை மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் தலைமை வகுத்து துவக்கி வைத்தார். ஈரோடு, பழையபாளையம் பகுதியில் உள்ள கற்பகா யோகாலயம் நிர்வாகியும், உணர்வுகள் அமைப்பின் செயல் இயக்குனருமான கற்பகம்

அனைவருக்கும் யோகா பயிற்சியினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் விஜயகுமார், அசோக்குமார் மாநகர நல அலுவலர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த யோகா பயிற்சி முகாம் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் 15 நாட்கள் நடத்தி, அனைத்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. செய்தி;அமுதினி