×

நேற்று தடை... இன்று தடை நீக்கம்..! பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்?
 

 

என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த ஆய்வில், குறிப்பிட்ட மதுபானங்களில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியபட்டது. இதையடுத்து, அந்த தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த FSSAI அமைப்பு உத்தரவிட்டது.

என்ரிகா நிறுவன மதுவகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம் :

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் பிரிவு 36(3)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, மேற்படி 11 மதுபான பிராண்டுகள் மீது பிறப்பிக்கப்பட்ட விற்பனைத் தடை உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்., டாஸ்மாக் (TASMAC) மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், இந்த 11 வகை மதுபானங்களின் மீதான தடை நீக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இது குறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது?" முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் விக்னேஷை குறிப்பிட்டு அ.தி.மு.க ஐடி விங் கேள்வி

பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்? - அதிமுக ஐடி விங் கேள்வி

கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது @CMOTamilNadu @VigneshTvkCbe ?

பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா?
என்னவா இருக்கும்?#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் pic.twitter.com/8ag70qt7Tn

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 15, 2026