அனைவரையும் காப்பற்றும் முதலமைச்சர் விஜய்...என்னை காப்பாற்ற மாட்டாரா? சட்டப்பேரவையில் அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி..!
நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், "நேற்றே இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு கொடுக்கிறேன். நாளையும் ஆதரவு கொடுப்பேன்
முதல்வரின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். நான் ஆதரவு தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனால், தமிழக மக்களை காப்பாற்றும் முதல்வர் என்னை காப்பாற்ற மாட்டாரா? எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மன்னார்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் எனக்கு உதவ வேண்டும்.அவர் பதவியேற்று 4 நாட்களில் திருச்சியில் ரவுடிகள் 300-க்கு மேற்பட்டோர் தாமாக முன்வந்து காவல்துறையில் பேசினார்கள் என்று அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
சுயேட்சை எம்எல்ஏ காமராஜ் பேசிக் கொண்டு இருந்த போது, அதிமுக உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சில விநாடிகள் சலசலப்பு நிலவியது.