ஏற்காடு விரைவு ரயில் நேரம் மாற்றம்
Dec 26, 2025, 18:09 IST
ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது தினமும் இரவு 9 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று ரயில்வே நிர்வாகம் நேரத்தை மாற்றி அமைத்துள்ளது இதன்படி வரும் ஒன்றாம் தேதி முதல் ஏற்காடு விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து 9 45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4:25 மணிக்கு சென்னை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது..