×

 ஏற்காடு தனியார் பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - தினகரன் இரங்கல்!!
 

 

ஏற்காடு மலைப்பகுதியில் பேருந்து விபத்தில் 5 பேர் பலியான நிலையில் தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று தடுப்புச்சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதே விபத்தில் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.